தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் உயிரை மாய்த்து கொள்ள முயற்சி! சிறையில் பதற்றம்
தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு அமைச்சரின் பயங்கர முடிவு
தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், கிம் யோங் ஹியூன்(Kim Yong Hyun), இராணுவ ஆட்சியை தவறாக விதிக்க முயன்றதாக குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், தன் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.
இந்த சம்பவம், குடியரசுத் தலைவர் யூன் சுக் இயோல் மீது கிளர்ச்சி குற்றச்சாட்டின் கீழ் குற்றவியல் விசாரணை நடைபெற்று வரும் போது நிகழ்ந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியூன், அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் குற்றம் சாட்டி, சியோல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 3 ஆம் திகதி இராணுவ ஆட்சி சட்டத்தை கொண்டு வந்ததை அடுத்து கைது செய்யப்பட்ட முதல் நபர் இவராவார்.
இதற்கிடையில், தென் கொரிய பொலிஸார் குடியரசுத் தலைவர் யூனின்(Yoon's) அலுவலகத்தை சோதனை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸார் இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இராணுவ ஆட்சி சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |