அடுத்தடுத்து விக்கெட்டுகளை தட்டித்தூக்கிய இலங்கை! மழையால் ஆட்டம் பாதிப்பு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது.
பந்துவீச்சை தெரிவு செய்த இலங்கை
இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் டர்பனில் இன்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
எய்டன் மார்க்ரம், டோனி டி ஸோர்சி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 4 ஓட்டங்கள் எடுத்திருந்த மார்க்ரம், வேகப்பந்துவீச்சாளர் அசிதா பெர்னாண்டோ ஓவரில் ஏஞ்சலோ மேத்யூஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
விக்கெட்டுகள் சரிவு
அதனைத் தொடர்ந்து விஷ்வா பெர்னாண்டோ ஓவரில் ஸோர்சி 4 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கமிந்து மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் லஹிரு குமாராவின் பந்துவீச்சில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (16), டேவிட் பெடிங்காம் (4) இருவரும் அவுட் ஆகினர்.
எனினும் அணித்தலைவர் டெம்பா பவுமா (Temba Bavuma) பவுண்டரிகளை விரட்டி 28 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |