தென் ஆப்பிரிக்காவுக்கு மரணஅடி கொடுத்த வங்கதேசம்! 114 ரன் இலக்கு
வங்கதேசத்திற்கு எதிரான உலகக்கிண்ண டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 113 ஓட்டங்கள் எடுத்தது.
அதிர்ச்சி கொடுத்த வங்கதேச பந்துவீச்சு
நியூயார்க்கில் வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
ரீஸா ஹென்றிக்ஸ் தான் சந்தித்த முதல் பந்திலேயே LBW முறையில் டன்ஸிம் ஹசன் ஓவரில் அவுட் ஆனார். பின்னர் 2 சிக்ஸர்களை பறக்கவிட்ட டி காக் 18 (11) ஓட்டங்களில் டன்ஸிம் ஹசன் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
அடுத்து வந்த மார்க்ரம் 4 ஓட்டங்களில் தஸ்கின் அகமது ஓவரில் ஆட்டமிழக்க, ஸ்டப்ஸை டக் அவுட் ஆக்கினார் டன்ஸிம் ஹசன். இதனால் தென் ஆப்பிரிக்கா 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது.
அணியை மீட்ட கிளாசென்
அதன் பின்னர் ஹெய்ன்ரிச் கிளாசென் (Heinrich Klaasen) மற்றும் டேவிட் மில்லர் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்க போராடியது. குறிப்பாக கிளாசென் சிக்ஸர்களை பறக்கவிட அணி பாரிய ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் 46 (44) ஓட்டங்களில் இருந்தபோது தஸ்கின் ஓவரில் போல்டு ஆக தென் ஆப்பிரிக்க அணி நிலைகுலைந்தது. டேவிட் மில்லர் 29 (38) ஓட்டங்களில் ரிஷாத் ஓவரில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 113 ஓட்டங்களே எடுத்தது.
Tanzim Hasan Sakib shines with an impressive 3/18 against South Africa! ???
— Bangladesh Cricket (@BCBtigers) June 10, 2024
Photo Credit: ICC/Getty#BCB #Cricket #BANvSA #T20WorldCup pic.twitter.com/LgaCVSzVTl
டன்ஸிம் ஹசன் 3 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளும், ரிஷாத் ஹொசைன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Exceptional effort by TaskinAhmed, securing 2/19 against South Africa! ???
— Bangladesh Cricket (@BCBtigers) June 10, 2024
Photo Credit: ICC/Getty#BCB #Cricket #BANvSA #T20WorldCup pic.twitter.com/nfOEdS4AdB
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |