SA20 ஏலம்; சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ள பொல்லார்ட்
sa20 2027 auction, jsk bought pollard: CSK நிறுவனத்தின் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் SA20 க்கான ஏலத்தில் கீரோன் பொல்லார்ட்டை வாங்கியுள்ளது.
SA20 ஏலம்
தென் ஆப்பிரிக்காவில் 2023 ஆம் ஆண்டு முதல், 6 அணிகள் கலந்து கொள்ளும், SA20 என்னும் T20 லீக் போட்டி நடைபெற்று வருகிறது.

2027 ஆம் ஆண்டின் SA20 தொடர் ஜனவரி 17 தொடங்கி பிப்ரவரி 21 வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏலம் நேற்று நடைபெற்றுள்ளது.
95 தென்னாப்பிரிக்க வீரர்கள், 61 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 156 வீரர்கள் இந்த ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் ஏற்கனவே தங்கள் 19 வீரர்களைக் கொண்ட அணிகளை நிறைவு செய்துள்ளதால், மீதமுள்ள 4 அணிகள் மொத்தமாக 19 வீரர்களை வாங்க இந்த ஏலத்தில் பங்குபெற்றன.
JSKவில் இணைந்த பொல்லார்ட்

இதில் அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், தென் ஆப்பிரிக்கா வீரர் ஜேசன் ரோல்ஸை 2, 900, 000 தென்னாப்பிரிக்க ராண்ட்ற்கு(இந்திய மதிப்பில் ரூ.1.68 கோடி) வாங்கியுள்ளது.

இதே போல் MI அணியில் நீண்ட காலமாக விளையாடி வந்த மேற்கிந்திய தீவுகள் வீரர் கீரோன் பொல்லார்ட்டை, ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 1,500,000 தென்னாப்பிரிக்க ராண்ட்ற்கு(இந்திய மதிப்பில் ரூ.87 லட்சம்) வாங்கியுள்ளது.
We got Pollard in yellow before GTA VI 😭💛 #WhistleForJoburg https://t.co/WPbx47GAbd
— Joburg Super Kings (@JSKSA20) October 7, 2026
2010 ஐபிஎல் ஏலத்தின் போது பொல்லார்டை வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், ரகசிய டை பிரேக்கர் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கைப்பற்றியது.