ராணுவ ஆட்சிக்கு வழி வகுக்க இலங்கையில் வன்முறைகள் வெடிக்கலாம்! முன்னாள் ஜனாதிபதி எச்சரிக்கை
ராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் இலங்கையில் வன்முறைகள் வெடிக்கலாம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ட்விட்டரில் பதிவிட்டதாவது, ராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் சதித்திட்டம் திட்டலாம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு, நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் நமது குடிமக்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
தயவு செய்து இந்த ஆபத்தை நிறுத்த உங்கள் நிறுவனத் திறமையைப் பயன்படுத்துமாறு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
ஹெலிகாப்டரில் தப்பிச் சென்ற நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன்! வெளியான காணொளி
இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று இடம்பெற்ற வன்முறையில் 7 பேர் பலியாகியுள்ளனர்.
231 பேர் காயமடைந்த நிலையில் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.