மகாராணி எலிசபெத்தின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவு! இந்திய கிரிக்கெட் வீரர்களின் இரங்கல் பதிவு
மகாராணி எலிசபெத்தின் மறைவுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் டெண்டுல்கர், யுவராஜ் சிங் இரங்கல்
மக்கள் ராணி எலிசபெத் மீது கொண்டிருந்த அன்பும், மரியாதையும் பார்க்க மனதிற்கு இதமாக இருந்தது - சச்சின் டெண்டுல்கர்
பிரித்தானிய மகாராணி எலிசபெத்தின் மறைவுக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரலில் மாளிகையில் மகாராணி எலிசபெத் தனது 96வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலகத் தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்ட இரங்கல் பதிவில்,
'இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். பல சந்தர்ப்பங்களில் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மக்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பும், மரியாதையும் பார்க்க மனதிற்கு இதமாக இருந்தது. அவரது குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்' என தெரிவித்துள்ளார்.
Saddened to hear about the passing away of Queen Elizabeth II. I had the opportunity to meet her in person on a number of occasions, and the love & respect that people had for her was heartening to see. My deepest condolences to her family and dear ones.
— Sachin Tendulkar (@sachin_rt) September 9, 2022
PC: PTI
அதேபோல் மற்றோரு முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தனது பதிவில், 'மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. அவரது வாழ்க்கை உள் வலிமைக்கான சாட்சியம், தைரியம் மற்றும் மக்கள் மீது அவரது பக்தி ஆகியவற்றின் சாட்சியாக இருந்தது. இந்த துயர நேரத்தில் அரச குடும்பத்தினருக்கும், அவரது எண்ணற்ற நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்' என தெரிவித்துள்ளார்.
The passing away of Her Majesty Queen Elizabeth II marks the end of an era. Her life was a testimony of inner strength, courage and devotion towards her people. My deepest condolences to the royal family and her countless well-wishers in this hour of grief ?? #QueenElizabeth
— Yuvraj Singh (@YUVSTRONG12) September 9, 2022
PC: Getty Images