அடேங்கப்பா.. மகனுக்கு பரிசு கொடுக்க விலையுயர்ந்த காரை வாங்கிய சச்சின் - விலை எவ்வளவுன்னு தெரியுமா?
மகனுக்கு பரிசு கொடுக்க விலையுயர்ந்த காரை சச்சின் வாங்கியுள்ளதாக தற்போது சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
விலையுயர்ந்த காரை வாங்கிய சச்சின்
இந்திய கிரிக்கெட் உலகில் ஜாம்பவனாக வலம் வந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் ரசிகர்களுக்கு இந்திய கிரிக்கெட் காதலர். இன்று வரை ஒவ்வொரு இந்திய ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.
'தி லிட்டில் மாஸ்டர்' என்றும் 'மாஸ்டர் பிளாஸ்டர்' என்றம் ரசிகர்கள் இவரை அன்போடு அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், விலை மதிப்பு கொண்ட லம்போர்கினி பிராண்டில் இருக்கும் ஓரே SUV காரான உருஸ் எஸ் மாடல் கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த கார் உலகளவில் மிகவும் காஸ்ட்லியான காராகும்.
Lamborghini Urus S காரை சச்சின் ரூ.4.18 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறார். இந்த காரை வாங்கிய சச்சின், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக தன் மகனாக அர்ஜூனுக்கு பரிசாக கொடுக்க வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lamborghini has designed a special car for Sachin. To drive it, the spine is not necessary. pic.twitter.com/xt38YfYQoA
— CARIBAPPA (@DJSingh85016049) June 2, 2023