டீ கொடுப்பதில் பிரச்சனை! மாமியார் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்
முதலில் எனக்கு டீ கொடுக்காமல் உன் தம்பிக்கு கொடுக்கிறாய் என வந்த தகராறில் கணவரை, மனைவியின் தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாமியார் வீட்டிற்கு வந்த மாப்பிள்ளை
இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த கண்னிகை பேர் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் யுவராஜ். 28 வயதான இவர் டிரைவர் தொழில் செய்து வருகிறார்.
இவர், சென்னை வியாசர்பாடியில் உள்ள பி.வி.காலனி 29-வது தெருவைச் சேர்ந்த யாஸ்மின் என்பவரது மகளான ஜூனத் நிஷாவை திருமணம் செய்து கொண்டார். ஜூனத் நிஷாவிற்கு அப்துல்லா என்ற தம்பி ஒருவரும் உள்ளார்.
அப்போது, தனது தாயை பார்ப்பதற்கு வியாசர்பாடிக்கு நிஷா வந்துள்ளார். இதனையடுத்து, தனது மனைவியை பார்ப்பதற்கு யுவராஜ் வந்துள்ளார்.
டீயால் வந்த தகராறு:
அப்போது, நிஷாவின் தம்பி அப்துல்லா தனக்கு டீ போட்டு தரும்படி கேட்டுள்ளார். உடனே, நிஷா தனது தம்பிக்கு டீ போட்டு கொடுத்துள்ளார்.
இதனால், எனக்கு முதலில் டீ தராமல் உன் தம்பிக்கு கொடுக்கிறார் என்று, யுவராஜ் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு சண்டையிட்டார். இதில், கோபமடைந்த அப்துல்லா சமயலறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து யுவராஜின் தலையில் வெட்டினார்.
இதில், படுகாயமடைந்த யுவராஜ் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர்,தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எம்.கே.பி. நகர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து நிஷாவின் தம்பி அப்துல்லாவை கைது செய்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |