பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியல் - முதல் 25 இடத்தில் 7 தமிழக நகரங்கள்
பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டு நகரங்கள் பிற மாநிலங்களை விட அதிகளவில் உள்ளன.
2வது இடத்தில் சென்னை
பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்களின் பட்டியலை((TCWI) வெளியிட்டுள்ளது.

இதில், பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு வாய்ப்புகள், உள்ளடக்கிய பணியிடங்கள் மற்றும் பெண் தொழில்முனைவோருக்கான ஆதரவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து 125 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில், 53.29 என்ற CIS குறியீட்டுடன் கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
49.86 புள்ளிகளுடன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை 2வது இடத்தில் உள்ளது.

46.27 புள்ளிகளுடன் புனே 3வது இடத்திலும், 46.04 புள்ளிகளுடன் ஹைதராபாத் 4வது இடத்திலும், 44.49 புள்ளிகளுடன் மும்பை 5வது இடத்திலும் உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள நகரங்களான கோயம்புத்தூர் 10வது இடத்திலும், திருச்சி 13வது இடத்திலும், மதுரை 15வது இடத்திலும், சேலம் 18வது இடத்திலும், வேலூர் 19வது இடத்திலும், ஈரோடு 25வது இடத்திலும் உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |