2027 ல் சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடுகள்; 133வது இடத்தில் இந்தியா
india at 133rd rank for safest country for treval in 2027: 2027 ஆம் ஆண்டு சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடுகளின் தரவரிசையில், இலங்கை 90வது இடத்திலும், இந்தியா 133வது இடத்திலும் உள்ளன.
சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடுகள்
CEO World என்ற இணையதளம், 198 நாடுகளை மதிப்பிட்டு சுற்றுலா செல்ல பாதுகாப்பான நாடுகளின் 2027 ஆம் ஆண்டுக்கான தரவரிசையை வெளியிட்டது.

இந்தத் தரவரிசையானது, பயண ஆலோசனைகள், அமைதி, குற்றப் பார்வை மற்றும் கொலை விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் 198 நாடுகளுக்கு மதிப்பெண் வழங்குகிறது.
இதில் 34 நாடுகள், 80 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்றுள்ளன. மேலும் அவற்றில் 23 நாடுகள் ஐரோப்பிய நாடுகளாகும்.
இதில், 89.72 மதிப்பெண்களுடன் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது.
88.91 மதிப்பெண்களுடன் ஜப்பான் 2வது இடத்திலும், 88.73 மதிப்பெண்களுடன் ஐஸ்லாந்து 3வது இடத்திலும், ஸ்லோவேனியா 88.63 மதிப்பெண்களுடன் 4வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 88.47 மதிப்பெண்களுடன் 5வது இடத்திலும் உள்ளது.
133வது இடத்தில் இந்தியா
இதில், இலங்கை 64.12 மதிப்பெண்களுடன் மிதமான பாதுகாப்பு அடுக்கு பிரிவில் 90வது இடத்தில் உள்ளது.
இந்தியா, 56.12 மதிப்பெண்களுடன் மிதமான பாதுகாப்பு அடுக்கு பிரிவில் 133வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் உலக அமைதிக் குறியீட்டுப் புள்ளி 2.409 ஆகும்.

80.79 மதிப்பெண்களுடன் மலேசியா 28வது இடத்திலும், 80.76 மதிப்பெண்களுடன் அவுஸ்திரேலியா 29வது இடத்திலும், 80.41 மதிப்பெண்களுடன் கனடா 34வது இடத்திலும், 70.16 மதிப்பெண்களுடன் ஜேர்மனி 67 வது இடத்திலும், 67.42 மதிப்பெண்களுடன் பிரித்தானியா 76வது இடத்திலும், 64.45 மதிப்பெண்களுடன் அமெரிக்கா 87 வது இடத்திலும், 60.96 மதிப்பெண்களுடன் பிரான்ஸ் 105வது இடத்தில் உள்ளது.
43.19 மதிப்பெண்களுடன் பாகிஸ்தான் குறைந்த பாதுகாப்பு அடுக்கு பிரிவில் 164வது இடத்திலும், இஸ்ரேல் 171வது இடத்திலும், ரஷ்யா 194வது இடத்திலும், ஹைட்டி 19.28 மதிப்பெண்களுடன் கடைசியாக 198வது இடத்தில் உள்ளது.