பெண்களுக்கு பாதுகாப்பான தேசம் கைலாசா: நடிகை ரஞ்சிதா பேச்சு
கைலாசாவில் பெண்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று நடிகையும் நித்தியானந்தாவின் தீவிர பக்தையுமான ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
பெண்களின் முன்னேற்றத்திற்கு கைலாசாவில் முன்னுரிமை
நித்தியானந்தாவால் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படும் கைலாசா தேசம் குறித்த பல செய்திகள் சமீபத்திய நாட்களில் அதிக அளவு பொதுவெளியில் உலாவுவதை காண்கிறோம்.
இந்நிலையில் கைலாசம் தேசம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த Podcast நிகழ்ச்சியில் பேசிய தமிழ் சினிமாவின் 90களின் முன்னணி நடிகையும், நித்தியானந்தாவின் தீவிர பக்தையுமான ரஞ்சிதா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அதில், கைலாசா எப்போதும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை தருகிறது. கைலாசா நாடு உருவாக்கப்படும் போது 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு இருப்பதாக நித்தியானந்தா அறிவித்தார். ஆனால் தற்போது கைலாசா நாட்டில் உள்ள 98 சதவீத பொறுப்புகளில் பெண்களே இருக்கின்றனர் என தெரிவித்தார்.
உலக நாடுகளின் கலந்தாய்வுகளில் கூட கைலாசா தன்னுடைய சார்பில் பெண் பிரதிநிதிகளையே அனுப்பி வைக்கிறது.
கைலாசாவில் சுதந்திரம், பாதுகாப்பு, அமைதி போன்றவை இருப்பதாக இங்கு இருக்கும் பெண்கள் தெரிவிக்கின்றனர் எனவும் ரஞ்சிதா குறிப்பிட்டுள்ளார்.
கைலாசாவில் எல்லாமே இலவசம்
கைலாசா முதல் இந்து தேசம், நான் யார் என்ற கேள்வி எழுந்தால் முதல் நீங்கள் வர வேண்டியது கைலாசா தேசம் தான் என்று ரஞ்சிதா குறிப்பிட்டுள்ளார்.
இங்கு கல்வி முற்றிலும் இலவசம், அதில் சுவாமி நித்தியானந்தா உறுதியுடன் இருக்கிறார், இங்கு விலங்குகள் எதுவும் கொல்லப்படுவது இல்லை, அதனால் அசைவ உணவுகளுக்கு அனுமதி இல்லை.
அத்துடன் உலக ஏற்பட்டுள்ள இரண்டு மிகப்பெரிய மாற்றத்தில் ஒன்று AI டெக்னாலஜி, மற்றொன்று கைலாசா, உலகின் மிகப்பெரிய கேம் சேஞ்ஜராக நித்தியானந்தா இருப்பார் என்றும் ரஞ்சிதா தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |