பிரித்தானிய மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பணியை செய்யும் செவிலியர்கள்: உருவாகியுள்ள அச்சம்
பிரித்தானிய மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுவதைத் தொடர்ந்து, மருத்துவர்களின் வேலையை, அவர்களுக்கு பதிலாக செவிலியர்கள் செய்யும் நிலை உருவாகியுள்ளதால், சிகிச்சை எப்படியிருக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.
உருவாகியுள்ள அச்சம்
பிரித்தானியாவில், அவசர சிகிச்சைப் பிரிவு, மழலையர் பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு போன்ற இடங்களில் ’advanced practitioners’ என அழைக்கப்படும் ஊழியர்கள் பணிகளைக் கையாண்டு வருகிறார்கள்.
மருத்துவர்களுக்குப் பதிலாக அவர்களுடைய பணிகளைச் செய்ய அமர்த்தப்பட்டுள்ள இந்த ’advanced practitioners’ வேறு யாரும் இல்லை, அவர்கள் மூத்த செவிலியர்கள்!
Jeff Moore/PA
பிரித்தானியாவில் கிட்டத்தட்ட பாதி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் அவர்களுக்குப் பதிலாக இந்த செவிலியர்களுக்குத்தான் மருத்துவர்களின் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இப்படி மருத்துவர்களுக்கு பதிலாக செவிலியர்களுக்கு பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளதால் சிகிச்சையின் தரம் எப்படியிருக்குமோ என்ற அச்சம் ஒரு பக்கம் உருவாகியிருக்க, ஒருவேளை பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக மருத்துவமனைகள் இந்த மூத்த செவிலியர்களை பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள பிரித்தானிய மருத்துவக் கூட்டமைப்பு, இப்படி மருத்துவர்கள் அல்லாதவர்களை மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்துவது பாதுகாப்பானது அல்ல என எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |