ஹாட்ரிக் கோல் அடித்த சுனில் சேத்ரி: தெற்காசிய கால்பந்து தொடரில் இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான்
தெற்காசிய கால்பந்து தொடரில் பாகிஸ்தான் அணியை 0-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆதிக்கம் செலுத்திய இந்தியா
ஜூன் 21ம் திகதி தொடங்கிய தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு கோப்பை(SAFF) தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்திலேயே இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் கோலை பதிவு செய்தார்.
Enjoy Sunil Chhetri's first goal against Pakistan.#Celebratefootball #SAFFChampionship2023 #INDPAK #INDvsPAK pic.twitter.com/Qw5xL3O3XN
— T Sports (@TSports_bd) June 21, 2023
இதனால் ஆரம்பத்திலேயே ஆட்டம் சூடு பிடிக்க, ஆட்டத்தின் 16 வது இந்திய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது, இதையும் திறமையாக பயன்படுத்தி கொண்ட இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி இந்திய அணிக்காக இரண்டாவது கோலை அடித்தார்.
முதல் பாதி ஆட்டத்தை இந்திய அணி 2-0 என்ற நிலையில் ஆதிக்கம் செலுத்தியது.
இந்திய அணி வெற்றி
முன்னிலையுடன் இரண்டாவது பாதி ஆட்டத்தில் களமிறங்கிய இந்திய அணிக்கு, கேப்டன் சுனில் சேத்ரி தன்னுடைய ஹாட்ரிக் கோலை ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் இந்திய அணிக்காக பெற்றுத் தந்தார்.
Kanteerava. Rain. Chhetri prancing. West Block dancing.
— Bengaluru FC (@bengalurufc) June 21, 2023
The game was over before it began. ??#INDPAK #IndianFootball #SAFF2023 pic.twitter.com/66OICeWc6m
இதையடுத்து கிட்டத்தட்ட ஆட்டம் இந்திய அணியின் கைகளுக்குள் வந்து விட்டாலும், இந்திய அணியின் கோல் மழை தொடர்ந்து வந்தது.
இந்திய அணியின் உதாந்த சிங் கூமம் தனது பங்கிற்கு ஆட்டத்தின் 81 வது நிமிடத்தில் ஒரு அசத்தலான கோல் ஒன்றை இந்திய அணிக்காக அடித்தார்.
ஆட்டத்தின் இறுதி வரை பாகிஸ்தான் அணி ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனதால், 0-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
⚽ They say actions speak louder than words, and the scoreboard says it all!
— The Bharat Army (@thebharatarmy) June 21, 2023
4️⃣ - 0️⃣ Well done boys. ?
? Indian Football • #SAFFChampionship2023 #INDPAK #IndianFootball #BackTheBlue #TeamIndia #BharatArmy pic.twitter.com/n2oBUN3VlR
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |