இலங்கை வீரரின் அதிரடி வீண்..கேப்டனின் சரவெடியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி
Pakistan beat sri lanka by 4 wickets in 1st t20: இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராவல்பிண்டியில் நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது.
லஹிரு உதர 91 ஓட்டங்கள்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ராவல்பிண்டியில் நடந்தது.

முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது. அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய தொடக்க வீரர் லஹிரு உதர, 55 பந்துகளில் ஒரு சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்கள் விளாசினார்.
நசீம் ஷா 3 விக்கெட்டுகளும், மொஹம்மது இம்ரான் 2 விக்கெட்டுகளும், ரஸவுல்லா, ஷதாப் கான் மற்றும் சைம் அயூப் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஃபர்ஹான் அதகளம்
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் ஃபஹர் ஜமான் 21 ஓட்டங்களில் வெளியேற, மாஸ் சதாகத் (Maaz Sadaqat) அரைசதம் அடித்து 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொதப்ப, அணித்தலைவர் சாஹிப்சதா ஃபர்ஹான் (Sahibzada Farhan) தனியாளாக சிக்ஸர்களை பறக்கவிட்டு அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அவர் 53 பந்துகளில் 89 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 187 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இலங்கையின் தரப்பில் இஷான் மலிங்கா, தீக்ஷணா தலா 2 விக்கெட்டுகளும், துஷாரா, சமீரா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
