250 இலக்கினை 18.3 ஓவரில் எட்டி அதிர்ச்சி கொடுத்த மே.தீவுகள்! ஹோப் 102 நாட்அவுட்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ராஞ்சியில் நடந்த இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சஞ்சு சாம்சன் 82
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ராஞ்சியில் நடந்தது. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 249 ஓட்டங்கள் குவித்தது.
சஞ்சு சாம்சன் 82 (41) ஓட்டங்களும், திலக் வர்மா 44 (18) ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 5 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற, ரோவ்மன் பௌல் 13 பந்துகளில் 24 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
அடுத்து கைகோர்த்த ஷாய் ஹோப் மற்றும் ஷெர்பானே ரூதர்போர்டு (Sherfane Rutherford) கூட்டணி இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.

ஷாய் ஹோப் சதம்
இந்தக் கூட்டணி மேற்கிந்திய தீவுகளை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல, ரூதர்போர்டு 84 (37) ஓட்டங்கள் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார்.

எனினும் ரோமாரியா ஷெப்பர்ட் சரவெடியாக வெடிக்க, ஷாய் ஹோப் சதம் விளாச மேற்கிந்திய தீவுகள் 18.3 ஓவர்களில் 252 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷாய் ஹோப் 45 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 102 ஓட்டங்களும், ஷெப்பர்ட் 13 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களும் விளாசினர்.
