சச்சின் டெண்டுல்கரின் இமாலய சாதனையை நொறுக்கிய 23 வயது தமிழக வீரர்! T20யில் முதல் வீரரும் இவரே
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்கள் கடந்த வீரர் எனும் சச்சின் டெண்டுகரின் சாதனையை, தமிழகத்தின் சாய் சுதர்ஸன் முறியடித்தார்.
சாய் சுதர்ஸன் சாதனை
நேற்று நடந்த ஐபிஎல் 2025 தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
முதலில் ஆடிய குஜராத் அணி 224 ஓட்டங்கள் குவித்தது. சுப்மன் கில் 76 ஓட்டங்களும், ஜோஸ் பட்லர் 64 ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் 186 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 74 (41) ஓட்டங்கள் குவித்தார்.
இப்போட்டியில் தமிழக வீரர் சாய் சுதர்ஸன் (குஜராத் டைட்டன்ஸ்) 23 பந்துகளில் 48 ஓட்டங்கள் விளாசினார்.
முதல் இந்தியர்
இதன்மூலம் அவர் டி20யில் அதிவேகமாக 2000 ஓட்டங்களை கடந்தார். 54 இன்னிங்ஸில் இதனை எட்டியதன் மூலம் சச்சின் டெண்டுகரின் சாதனையை (59 இன்னிங்ஸ்) முறியடித்தார்.
அதாவது, டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்களை எட்டிய முதல் இந்தியர் சாய் சுதர்ஸன் (Sai Sudharsan) ஆவார்.
சர்வதேச அளவில் அவுஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் (Shaun Marsh) 53 இன்னிங்ஸில் இதனை எட்டி முதலிடத்தில் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |