அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்றேன்- கொள்ளையன் குறித்து சைஃப் அலிகானின் வாக்குமூலம்
தனது வீட்டில் கொள்ளையன் புகுந்த போது நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் குறித்து நடிகர் சைஃப் அலிகான் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காயமடைந்த சைஃப் அலிகான்
மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜன16ஆம் திகதி நள்ளிரவில் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றார்.
கொள்ளையன் வந்ததை பார்த்த வீட்டு பணியாளர்கள் அவரை தடுக்க முயன்ற போது அங்கு வந்த சைஃப் அலிகானையும் அந்த நபர் 6 முறை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
இதன்பின், சைஃப் அலிகானை தாக்கியதாகக் கூறப்படும் நபர் மும்பை தானேவில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சைஃப் அலி கானிடம் மும்பை பாந்த்ரா பொலிஸார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
அவர் கூறியதாவது..,
“நானும் மனைவி கரீனா கபூரும் எங்கள் அறையில் இருந்தோம். அப்போது, எனது இளைய மகன் ஜஹாங்கிரை கவனித்து வரும் பணியாளரின் அலறல் சத்தம் கேட்டு தானும், மனைவி கரினாவும் அங்கு சென்றோம்.
அங்கே கையில் ஆயுதத்துடன் நின்றிருந்த கொள்ளையன், ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார்.
கொள்ளையனை தடுக்க முயன்ற போது எனது முதுகு, கழுத்து பகுதியில் கொள்ளையன் கத்தியால் குத்தினார். காயம் ஏற்பட்ட நிலையிலும் கொள்ளையனை அறைக்குள் தள்ளி அறையை பூட்டினேன்” என சைஃப் தெரிவித்தார்.
பின்னர் குடும்பத்துடன் வேறு தளத்துக்கு சென்றுவிட்டதாக சைஃப் அலிகான் கூறியுள்ளார்.
வீட்டு பணியாட்கள் அந்த அறையை திறந்து பார்த்த போது உள்ளே யாரும் இல்லை என தெரிவித்த சைஃப், அங்கிருந்து கொள்ளையன் எப்படி தப்பி சென்றார் என்று தெரியவில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |