நடப்பு தொடரில் ஹாட்ரிக் டக்அவுட்! சொதப்பும் பாகிஸ்தான் வீரர்..ஆனாலும் தேவை ஏன்?
சைம் அயூப் தொடர்ச்சியாக டக்அவுட் ஆகி வருவது பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வரிசையை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நம்பிக்கை வீரர்
ஆசியக் கிண்ணத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
கடந்த 14ஆம் திகதி நடந்த மோதலில், பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்தது.
அதற்கு இன்றையப் போட்டியில் பழிதீர்க்குமா என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், நம்பிக்கை வீரர் ஒருவரின் துடுப்பாட்டம்தான் பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக ஒவ்வொரு போட்டியிலும் அமைந்திருக்கிறது.
தொடர் சொதப்பல்
அந்த அணியின் தொடக்க வீரரான சைம் அயூப் (Saim Ayub) விளையாடிய மூன்று போட்டிகளிலும் ஓட்டங்களே எடுக்கவில்லை.
ஓமன் மற்றும் இந்தியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முதல் பந்திலும், அமீரக அணிக்கு எதிரான போட்டியில் 2வது பந்திலும் என ஹாட்ரிக் முறை டக்அவுட் ஆகியுள்ளார்.
அதே சமயம் இந்திய அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும், ஓமன் அணிக்கும் எதிராக 2 விக்கெட்டுகள் மற்றும் அமீரகத்திற்கு எதிராக ஒரு விக்கெட் என மொத்தம் 6 விக்கெட்டுகளை சாய்துள்ளார்.
பந்துவீச்சில் அவரது பங்களிப்பு முக்கியம் என்பதால் நம்பிக்கை நட்சத்திரமாக அவர் அணியில் நீடிக்கிறார்.
அதே சமயம், தொடக்க வீரரான அவர் துடுப்பாட்டத்திலும் சோபிக்க வேண்டும் என்பதே PCB மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |