சாய்னா குறித்து நடிகர் சித்தார்த் ஆபாச சர்ச்சை கருத்து! கிழித்து தொங்கவிட்ட தந்தை
பிரதமர் மோடிக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்துபதிவிட்ட பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து , மிகவும் ஆபாசமாக முறையில் அவதூறாக விமர்சனம் செய்த நடிகர் சித்தார்த்தை சாய்னாவின் தந்தை கடுமையாக சாடியுள்ளார்.
தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் சித்தார்த் சமூக வலைதளமான டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். குறிப்பாக மத்திய அரசுக்கு எதிராகவும் , பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சியினருக்கு எதிராகவும் தொடர்ந்து டுவிட்டரில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில் அண்மையில் பஞ்சாப் சென்ற பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கருத்து பதிவிட்டிருந்த பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக நாட்டின் பிரதமருக்கே பாதுகாப்பு இல்லை என்றால் மற்ற சாமானிய மக்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பியதோடு பாரத் ஸ்டேண்ட் வித் மோடி, என்ற ஹேஷ்டாக்கையும் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர் வினையாற்றும் நோக்கில் வழக்கம் போல டுவிட்டரில் கருத்து பதிவிட்டார் நடிகர் சித்தார்த். அதில் அவர் செட்டில்கார்க்கில் விளையாடும் வீராங்கனை சாய்னா நேவாலை மிகவும் ஆபாசமாக குறிப்பிட்டு கருத்து பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
சித்தார்த்தின் இந்த செயலுக்கு இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். சித்தார்த்தின் இந்த அறுவெறுபான டுவிட்டர் விவகாரத்தை தன்னிச்சையாக விசாரணைக்கு கையில் எடுத்துள்ள தேசிய மகளிர் ஆணைய தலைவி நேகா சர்மா, டுவிட்டரின் தலைமையகம் மும்பையில் இருப்பதால், உடனடியாக இது குறித்து சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள மகராஷ்டிரா காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சித்தார்த்தின் பதிவுக்கு சாய்னாவின் தந்தை ஹர்வீர் சிங் நேவால் கண்டனம் தெரிவித்து அவரை விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், பேட்மிண்டன் மூலம் சாய்னா இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றுள்ள நிலையில், அந்த நடிகர் நாட்டிற்காக என்ன பங்களிப்பை கொடுத்துள்ளார் என சித்தார்த்தை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
அவர் என் மகளுக்கு இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியபோது நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன்.
சாய்னாவுக்கு விளையாட்டு வீரர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
ஏனெனில், ஒரு விளையாட்டு வீரர் எவ்வளவு போராட்டத்தை சந்திக்கிறார் என்பதை அவர்கள் அறிவார்கள் என கூறியுள்ளனர்.