உலகில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி CEO-க்கள்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொழில்நுட்ப உலகில் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றுள்ளனர்.
தங்கள் நிர்வாக திறமையால் முன்னணி நிறுவனங்களில் உயர்ந்த பதவிகளில் பணியாற்றி வரும் இந்த தலைவர்களின் சம்பள விவரங்கள் பலரின் கவனத்தை ஈர்க்கின்றன.
சத்ய நடேலா, சுந்தர் பிச்சை, சந்தானு நாராயண், சஞ்சய் மேஹ்ரோத்ரா, அரவிந்த் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் உலகளவில் அதிக வருமானம் பெறுபவர்களாக உள்ளனர்.
சுந்தர் பிச்சை (Sundar Pichai)
கூகுள் மற்றும் ஆல்பாபெட் நிறுவனங்களின் CEO ஆன சுந்தர் பிச்சை, வருடத்திற்கு ரூ.1,846 கோடி சம்பளம் பெறுகிறார். இது சத்யா நாதெள்ளாவின் சம்பளத்தைப்போல் மூன்று மடங்காகும். இன்று பல இளைஞர்களுக்கு அவரை முன்னோடியாகக் கருதுகிறார்கள்.
சத்யா நாதெள்ளா (Satya Nadella)
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO-ஆக இருக்கும் சத்யா நாதெள்ளா, 2024ஆம் ஆண்டு USD 79.106 மில்லியன் (சுமார் ரூ.665.15 கோடி) சம்பளம் பெறுகிறார்.
2014-ஆம் ஆண்டில் அவர் USD 84 மில்லியன் சம்பளம் பெற்றதைத் தொடர்ந்து, இது அவரது இரண்டாவது பாரிய சம்பளமாகும்.
சாந்தனு நாராயண் (Shantanu Narayen)
அடோப் (Adobe) நிறுவனத்தின் CEO-ஆன சாந்தனு நாராயண், வருடத்திற்கு ரூ.300 கோடி சம்பளம் பெறுகிறார். 1998ஆம் ஆண்டில் அடோபில் சேர்ந்த அவர், Apple மற்றும் Silicon Graphics போன்ற நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
சஞ்சய் மேஹ்ரோத்ரா (Sanjay Mehrotra)
மைக்ரான் டெக்னாலஜியின் CEO-ஆன சஞ்சய் மேஹ்ரோத்ரா, முன்னதாக SanDisk நிறுவனத்தின் நிறுவுனர்களில் ஒருவராக இருந்தார். SanDisk-ஐ Western Digital கைப்பற்றிய பின்னர், அவர் மைக்ரான் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். அவர் வருடத்திற்கு ரூ.206 கோடி சம்பளம் பெறுகிறார்.
அரவிந்த் கிருஷ்ணா (Arvind Krishna)
IBM நிறுவனத்தின் CEO அரவிந்த் கிருஷ்ணா, 1990ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்து பல தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை வகித்துள்ளார். 2020-ஆம் ஆண்டில் CEO ஆன அவர், வருடத்திற்கு ரூ.165 கோடி சம்பளம் பெறுகிறார்.
பங்கு அடிப்படையிலான வருமானம்
இந்த முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள், தங்கள் சம்பளத்துடன் பங்குகளையும் பெறுகின்றனர். பங்குகள் உயர்ந்தால் அவர்களின் வருமானமும் அதிகரிக்கும்.
எடுத்துக்காட்டாக, சத்யா நாதெள்ளா கடந்த வருடத்தில் USD 39 மில்லியன் (ரூ.328 கோடி) பெற, இந்த வருடம் அதே பங்குகளின் மதிப்பு USD 71 மில்லியன் (ரூ.597 கோடி) ஆக உயர்ந்துள்ளது.
இந்த உயர்ந்த சம்பளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியில் இவர்களின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகின்றன. இவர்களின் வெற்றி கதை பலருக்கும் ஊக்கமாக உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Salaries of top Indian-origin CEOs, Satya Nadella, Sundar Pichai, Arvind Krishna, Sanjay Mehrotra, Shantanu Narayen