எல்லையில் போராடும் ராணுவ அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ
சொந்த ஊர், நட்பு, குடும்பம் என அனைத்தையும் தியாகம் செய்து தன்னுடைய தாய்நாட்டிற்காக எல்லையில் நின்று தனது உயிரை பற்றியும் கவலைப்படாமல் பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களின் கதைகளை கேட்டும் பொழுதே மெய் சிலிர்க்க வைக்கும்.
இந்திய ராணுவத்தில் இருந்து கொண்டு பல முக்கியமான நேரங்களில் தெளிவாக செயல்பட்டு உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களும் உள்ளனர். அப்படிபட்டவர்களின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்திய இராணுவத்தில் மொத்தம் 18 பதவிகள் உள்ளது. அதில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சம்பளம், சலுகைகள் என நிர்ணயிக்கப்பட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கொடுப்பதாக கூறப்படுகிறது.
சிப்பாய் லேன்ஸ் நாயக் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ. 21,700 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ. 57,138 கிடைக்கிறது.
நாயக் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ.25,500 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ. 60,938 வழங்கப்படுகிறது.
ஹாவல்தார் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ.29,200 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ.64,638 வழங்கப்படுகிறது.
நயிப் சுபேதார்யின் அடிப்படை சம்பளம் ரூ.35,400 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ.70,838 வழங்கப்படுகிறது.
சுபேதார் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ. 44,900 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ.80,338 வழங்கப்படுகிறது.
சுபேதார் மேஜர் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ. 47,600 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ.83,038 வழங்கப்படுகிறது.
லெப்டினன்ட் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ. 56,100ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ. 91,538 வழங்கப்படுகிறது.
கேப்டன் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ.61,300 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ. 97,622 வழங்கப்படுகிறது.
மேஜர் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ.69,700 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ. 1,07,450 வழங்கப்படுகிறது.
லெப்டினன்ட் கர்னல் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ.1,22,100 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ.1,68,758 வழங்கப்படுகிறது.
கர்னல் பதவியின் அடிப்படை சம்பளம் ரூ.1,39,100 ஆகும். ஆனால் இராணுவ சேவை ஊக்கத்தொகை, போக்குவரத்து மற்றும் ரேஷன் உதவி தொகை போன்றவை சேர்த்து மொத்த சம்பளமாக ரூ.1,88,648 வழங்கப்படுகிறது.
எல்லையில் குளிர், பனி, மழை போன்றவையில் வாடும் இராணுவ வீரர்களுக்கு பதவிக்கு ஏற்பட்ட சலுகைகள், ஊக்கத்தொகைகளை அவ்வப்பொழுது மத்திய அரசு சம்பளம் மூலம் கொடுத்து வருகிறது.