கோடிகளில் சொத்து.., குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு?
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே.
தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கிக்கொண்டிருக்கும் பிரியங்கா, தன்னுடைய Youtube சேனல் மூலமாக ரசிகர்களை மகிழ வைத்து வருகிறார்.
இதனால் பல லட்சம் ரசிகர்கள் மனத்தில் தனக்கென்று தனி இடத்தை பிரியங்கா பிடித்துள்ளார்.
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், விருது வழங்கும் விழா, நேர்காணல் என பிரியங்கா பல ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.
பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பிரியங்கா, பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.
இதன் பிறகு, தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் அதிக ரசிகர்களை கவர்ந்த குக் வித் கோமாளி 5ஆவது சீசனில் இவர் குக்காக பங்கேற்றார்.
குக் வித் கோமாளி சீசன் 5 வெற்றியாளர் பிரியங்கா என்ற தகவல் ஒரு பக்கம் வெளியாகியுள்ளது.
தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க பிரியங்கா வாங்கிய சம்பளம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, பிரியங்கா குக் வித் கோமாளி சீசன் 5ல் ஒரு ஷோவிற்கு ரூ. 18 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி வருகிறது.
மேலும், தொகுப்பாளினி பிரியங்காவின் சொத்து மதிப்பு ரூ. 10 கோடி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர் ஒரு எபிசோட் தொகுத்து வழங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 2.5 லட்சம் சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |