தவறவிட்ட பாபர் அஸாம்.,இலங்கைக்கு எதிராக சதம் விளாசிய சல்மான்
Salman agha 107 runs vs sri lanka: இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சல்மான் ஆகா சதம் விளாசினார்.
முத்தரப்பு ஒருநாள் தொடர் போட்டியில், பாகிஸ்தானின் சல்மான் ஆகா இலங்கைக்கு எதிராக சதம் விளாசினார்.
பாபர் அஸாம்
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியில் நடந்து வருகிறது.
Babar Azam Gone For 45 As He Falls Into The Short Ball Trap 🫠 https://t.co/hNi7y84ebX
— Cricket Dani (@CricketDani56) October 18, 2026
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
தொடக்க வீரர்கள் சொதப்ப பாபர் அஸாம் 45 ஓட்டங்களும், சாத் பெய்க் 39 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சல்மான் ஆகா சதம்
பின்னர் ஹசன் நவாஸ், சல்மான் ஆகா கூட்டணி 97 ஓட்டங்கள் குவித்தது. ஹசன் நவாஸ் 37 ஓட்டங்களில் அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பொறுப்புடன் ஆடிய சல்மான் ஆகா (Salman Agha) தனது 4வது சதத்தினை பதிவு செய்தார். 90 பந்துகளை எதிர்கொண்ட அவர், 1 சிக்ஸர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 107 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் பாகிஸ்தான் அணி 305 ஓட்டங்கள் குவித்தது. இலங்கை தரப்பில் இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகளும், அசிதா பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளும், தில்ஷன் மதுஷங்கா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
