அதிரடியாக 300 ஓட்டங்கள் விளாசி மிரள வைத்த பாகிஸ்தான் வீரர்
Salman Ali Agha scored 300 in 336 balls: ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணிக்காக சல்மான் அலி அகா 300 ஓட்டங்கள் விளாசினார்.
பாகிஸ்தானின் சல்மான் அலி அகா மார்க்ஹோர் அணிக்கு எதிராக 336 பந்துகளில் 300 ஓட்டங்கள் விளாசினார்.
சல்மான் அலி அகா
பிரசிடெண்ட் டிராபி கிரேட் டெஸ்ட் போட்டியில் மார்க்ஹோர் ஐடி சொலியூஷன் மற்றும் ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணிகள் விளையாடி வருகின்றன.
ஐதராபாத் கிங்ஸ்மென் அகாடமி அணி முதல் இன்னிங்ஸில் 565 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய, மார்க்ஹோர் அணி 330 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய மார்க்ஹோர் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
கிங்ஸ்மென் அணியின் இன்னிங்ஸில், பாகிஸ்தான் டி20 அணித்தலைவரான சல்மான் அலி அகா (Salman Ali Agha) 336 பந்துகளில் 300 ஓட்டங்கள் விளாசி களத்தில் நின்றார்.
