இளவரசர் ஹரி ராஜகுடும்பத்துடன் எப்போது இணைவார்? பிரபல ஜோதிடக்கலைஞரின் கணிப்பு
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மரணம், கோவிட் முதலான விடயங்களை துல்லியமாக கணித்ததால், வாழும் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படுபவர் பிரேசில் நாட்டவரான ஏதோஸ் சாலோமே.
தற்போது, இளவரசர் ஹரி, ராஜகுடும்பத்துடன் இணைவது குறித்த கணிப்பொன்றை வெளியிட்டுள்ளார் அவர்.
சில மாதங்களுக்குள்...
ராஜகுடும்பத்தில், சில மாதங்களுக்குள் ஒரு முக்கிய விடயம் நிகழ இருப்பதாக தெரிவித்துள்ளார் ஏதோஸ்.

அது ராஜகுடும்பத்திலுள்ள முக்கிய நபர் ஒருவரின் உடல்நலம் சார்ந்த விடயமாக இருக்கலாம் என்று கூறியுள்ள ஏதோஸ், அது 2025 இறுதிக்கும் 2026 துவக்கத்துக்கும் இடையில் நிகழலாம் என்றும் கணித்துள்ளார். +
அந்த விடயம் காரணமாக, இளவரசர் ஹரி, உணர்வு ரீதியில் தன் குடும்பத்தினருடன் இணைவார் என்று கூறியுள்ளார் ஏதோஸ்.

ஆனாலும், நீண்ட காலமாக பேசிக்கொள்ளாமல் இருக்கும் சகோதரர்களான இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் இணைவது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்றும் ஏதோஸ் கூறியுள்ளார்.
சொல்லப்போனால், வில்லியம் ஹரி குடும்பத்துக்கு இடையிலான பிரச்சினை, அடுத்த தலைமுறையில்தான் சரியாகும், அதாவது, வில்லியம் மற்றும் ஹரியின் பிள்ளைகள் மூலமாக இரு குடும்பங்களும் சமரசம் ஆகலாம் என்றும் கணித்துள்ளார் ஏதோஸ்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |