இந்தியாவில் முதல் அலுவலகத்தை திறக்கும் OpenAI: மலிவு விலையுடன் புதிய சந்தா திட்டம்!
பிரபல OpenAI நிறுவனம் இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை இந்தியாவில் திறக்க உள்ளது.
AI-ஐ அதிகம் பயன்படுத்தும் இந்தியா
OpenAI, Gemini போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை இந்தியர்கள் வியக்கத்தக்க வகையில் தங்கள் தினசரி வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
சமீபத்தில் OpenAI நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்த தகவலில், OpenAI ChatGPT-ஐ பயன்படுத்தும் இந்திய பயனர்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளனர்.
இதன் மூலம் உலக அளவில் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாவது மிகப்பெரிய சந்தையாகவும் மாறியுள்ளது.
இந்தியர்களுக்கான புதிய திட்டம்
மிகப்பெரிய சந்தையை கொண்டுள்ள இந்தியாவை மையப்படுத்தி சமீபத்தில் OpenAI நிறுவனம் $4.60 அமெரிக்க டொலர் என்ற மலிவான மாதாந்திர சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்த விலை குறைப்பு திட்டம் கிட்டத்தட்ட 1 பில்லியனுக்கு அதிகமான இணைய பயனர்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய அலுவலகம்
இந்நிலையில் OpenAI நிறுவனம் இந்திய தலைநகர் டெல்லியில் தனது முதல் அலுவலகத்தை திறக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மேன் X தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |