சாம் கர்ரனின் ருத்ர தாண்டவத்தில் நொறுங்கிய கல்ஃப் ஜெயெண்ட்ஸ்! 4/10 என மிரட்டிய பந்துவீச்சாளர்
ILT20 போட்டியில் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயெண்ட்ஸை வீழ்த்தியது.
குஸைமா தன்வீர்
துபாயில் நடந்த போட்டியில் கல்ஃப் ஜெயெண்ட்ஸ் மற்றும் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணிகள் மோதின.
Bash. Crack. Boom! 💥
— International League T20 (@ILT20Official) December 12, 2025
Man-in-form Pathum Nissanka picks up where he left off from, going 6️⃣, 4️⃣, 4️⃣ in the very first over! Sight for sore eyes! 😍#DPWorldILT20 #AllInForCricket #WhereTheWorldPlays pic.twitter.com/j0DGU09sEm
முதலில் ஆடிய கல்ஃப் ஜெயெண்ட்ஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. ஆசிப் கான் 36 ஓட்டங்களும், மேயெர்ஸ் 30 ஓட்டங்களும் எடுத்தனர்.
மிரட்டலாக பந்துவீசிய குஸைமா தன்வீர் (Khuzaima Tanveer) 10 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நூர் அகமது 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் களமிறங்கிய டெஸெர்ட் வைப்பர்ஸ் அணியில் பஹர் ஜமான் 14 (8) ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், ஹசன் நவாஸ் 7 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
சாம் கர்ரன் அரைசதம்
சாம் கர்ரன் (Sam Curran) மற்றும் மேக்ஸ் ஹோல்டன் (Max Holden) இருவரும் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.
இவர்களின் அதிரடியில் டெஸெர்ட் அணி 16.5 ஓவர்களில் 158 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
மேக்ஸ் ஹோல்டன் 41 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 64 ஓட்டங்களும், சாம் கர்ரன் 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்களும் விளாசினர்.
நடப்பு தொடரில் டெஸெர்ட் வைப்பர்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
Sam Curran takes Liam Dawson down with three sixes in an over! 💥
— Cricbuzz (@cricbuzz) December 12, 2025
(Credit: @ILT20Official) pic.twitter.com/Ap82D4qXvO
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |