சரவெடியாய் வெடித்த சாம் கர்ரன்! 32 பந்தில் 50 ரன்..பந்துவீசி 3 விக்கெட்
The Hundred தொடரில் ஓவல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சௌதர்ன் பிரேவ் அணியை வீழ்த்தியது.
சாம் கர்ரன், ரஷித் கான்
சௌதாம்ப்டனில் நடந்த போட்டியில் சௌதர்ன் பிரேவ் மற்றும் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணிகள் மோதின.
Oval Invincibles are fired up! 🔥#TheHundred pic.twitter.com/lelorOqwhz
— The Hundred (@thehundred) August 18, 2025
முதலில் ஆடிய சௌதர்ன் பிரேவ் (Southern Brave) அணி 98 பந்துகளில் 133 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
கார்ட்ரைட் 30 பந்துகளில் 42 ஓட்டங்களும், தாம்ப்ஸன் 13 பந்துகளில் 24 ஓட்டங்களும் விளாசினர். சாம் கர்ரன் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளும், பெஹ்ரென்டோர்ப் 2 விக்கெட்டுகளும், டாம் கர்ரன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
ருத்ர தாண்டவம்
பின்னர் களமிறங்கிய ஓவல் அணி 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் ஜோர்டன் காக்ஸ் அதிரடியாக 37 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார்.
பந்துவீச்சில் மிரட்டிய சாம் கர்ரன் (Sam Curran) துடுப்பாட்டத்திலும் ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 32 பந்துகளில் 50 ஓட்டங்கள் குவித்தார். இதில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் ஓவல் இன்வின்சிபிள்ஸ் அணி (Oval Invincibles) அணி 89 பந்துகளில் 3 விக்கெட்டுக்கு 134 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |