குழந்தை பெற்றுக் கொள்ள நடிகை சமந்தா விரும்பினார்! தோழியும் தயாரிப்பாளருமான நீலிமா குணா சொன்ன தகவல்
நடிகை சமந்தா கணவரை விட்டு பிரிந்த நிலையில், அவர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பியதாக, தயாரிப்பாளர் நீலிமா குணா என்பவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சில தனிப்பட்ட காரணங்களால இருவரும் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
ஆனால் இதுவரை இவர்களின் விவாகரத்திற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. குறிப்பாக, நடிகை சமந்தா படங்களில் நடித்து கொண்டு, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததே முக்கிய காரணம் என்று செய்தி வெளியானது.

இதற்கு சமந்தா அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கும் என்று சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், சமந்தா சகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
அப்படத்தை தயாரித்துள்ளா  நீலிமா குணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், என் தந்தை குணசேகர் இந்த கதையை சமந்தாவிடம் கூறியபோது அவருக்கு கதை பிடித்துவிட்டது.
அப்போது சமந்தா வரும் ஆகஸ்ட்டிற்குள் படத்தை முடிக்கும் படியும், அதன்பின் அவர் குழந்தை பெற விரும்புவதாகவும், நீலிமா குணா கூறியுள்ளார்.
இதனால் நாகசைதன்யா அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.                            
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        