மேடையில் கண் கலங்க காரணம் இதுதான் - மௌனம் கலைத்த சமந்தா
மேடையில் கண் கலங்குவதற்கான காரணம் குறித்து சமந்தா விளக்கமளித்துள்ளார்.
சமந்தா
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து, தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக ஹிந்தி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
இதனிடையே கடந்த 2023 ஆம் ஆண்டு ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் சமந்தா.
இந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவான சுபம் என்ற படம் வரும் மே 9 ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. இதற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சமந்தா ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில், விசாகப்பட்டினத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சமந்தா மேடையில் கண்கலங்கியிருந்தார். இதற்கு முன்னதாகவும், பல மேடைகளில் இதேபோல் சமந்தா கண்கலங்கியுள்ளார்.
கண் கலங்குவது ஏன்?
இந்நிலையில், மேடைகளில் கண் கலங்குவதற்கான காரணம் குறித்து விளக்கமளித்து, சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதில் பேசிய அவர், "மேடையில் நான் கண்கலங்கி துடைப்பதற்கு காரணம் எமோஷனலாக இருப்பது அல்ல. பிரகாசமான வெளிச்சத்தை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வருகிறது.
அதனால் அப்படி துடைக்கிறேன். நான் உணர்ச்சிவசப்பட்டு அழுவதாக பலர் வதந்திகளை பரப்புகின்றனர். நான் நன்றாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |