28 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்... மகனுடன் இளவரசி டயானாவின் கடைசி புகைப்படம்
இளவரசி டயானா விபத்தில் கொல்லப்படும் முன் கடைசியாக தனது மகனான இளவரசர் வில்லியமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது.
28 ஆண்டுகளுக்கு முன் இதே நாள்...
ஆம், 28 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், அதாவது, 1997ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 21ஆம் திகதி, இளவரசி டயானாவும், அவரது மூத்த மகனான இளவரசர் வில்லியமும் லண்டனிலுள்ள உணவகம் ஒன்றிற்குச் சென்று திரும்பும்போது அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
அதுதான் இளவரசி டயானா தனது மகன் வில்லியமுடன் இணைந்திருக்கும் கடைசி புகைப்படம்.
ஆம், சரியாக 10 நாட்களுக்குப் பின், பாரீஸில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் கொல்லப்பட்டார் டயானா.
அப்போது, இளவரசர் வில்லியமுக்கு 15 வயது மட்டுமே. இளவரசர் ஹரிக்கோ வெறும் 12 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |