சமையலுக்கு ஒரே எண்ணெய்யை பலமுறை பயன்படுத்துகிறீர்களா? இதனால் வரும் ஆபத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்
நீங்கள் சமையலுக்கு ஒரே எண்ணெய்யை பலமுறை பயன்படுத்துபவராக இருந்தால் இந்த ஆபத்துக்களை சந்திக்க நேரிடலாம்.
என்னென்ன ஆபத்துகள்
நீங்கள் சமையலுக்கு ஒரே எண்ணெய்யைப் பயன்படுத்துவாராக இருந்தால், எச்சரிக்கையுடன் செயல்பட்டு உடல்நலத்தை பாதுகாக்க வேண்டும்.
பெரும்பாலான வீடுகள் மற்றும் ஹொட்டல்களில் ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துகின்றனர். இதனால் உடலுக்கு பெரிய ஆபத்துகள் ஏற்படலாம்.
அப்படி தயார் செய்யப்படும் உணவு விஷமாக மாற வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் பல ஆபத்துகள் நேரிடலாம்.
* ஒரு முறை பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தினால் நச்சுப் பொருட்கள் உருவாகலாம். இதன் மூலம் புற்றுநோய் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
* மேலும், இவ்வாறு செய்வதன் மூலம் டிரான்ஸ் கொழுப்பு அதிகரிக்கும். இதனால் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.
* பழைய எண்ணெய்யில் உள்ள அமிலங்கள் செரிமானத்தை பாதிக்கும். இதனால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு வர நேரிடும்.
* பலமுறை ஒரே எண்ணையை பயன்படுத்துவதால் அதிக கொழுப்பு சேர்ந்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும் அபாயம் உண்டாகும்.
* ஆக்சிடேஷன் காரணமாக நச்சுப் பொருட்கள் உருவாகும். இதன் மூலம் முகத்தில் பிம்பிள் மற்றும் அதிக எண்ணெய் சுரப்பு உருவாகலாம்.
* பழைய எண்ணையில் உள்ள நச்சுப்பொருட்கள் டாக்ஸின்களை வெளியேற்றும் திறனை குறைக்கும். இதன் மூலம் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.
* பழைய எண்ணையில் இருக்கும் பாக்டீரியாக்கள் உணவில் விஷ தன்மையை ஏற்படுத்தும். அதாவது, நுண்ணுயிர் தொற்று அபாயம் (Risk of microbial infection) உண்டாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |