இந்தியாவுக்கு எதிராக 172 ஓட்டங்கள் விளாசிய பாகிஸ்தான் வீரர்! இளையோர் கிரிக்கெட்டில் புதிய சாதனை
U19 ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 348 ஓட்டங்கள் வெற்றி இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயித்தது.
அகமது ஹூசைன் அரைசதம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான U19 ஆசியக் கிண்ண இறுதிப்போட்டி துபாயில் நடந்து வருகிறது.
Second fastest century in this U-19 Asia Cup
— Zubair Ali Khan (@ZubairAlikhanUN) December 21, 2025
Very Weldone #SameerMinhas !! pic.twitter.com/F97rshaHoh
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்ய, பாகிஸ்தான் துடுப்பாட்டத்தை தொடங்கியது.
உஸ்மான் கான் 45 பந்துகளில் 35 ஓட்டங்களும், அகமது ஹூசைன் 72 பந்துகளில் 56 ஓட்டங்களும் விளாசி ஆட்டமிழந்தனர்.
ஆனால், சிக்ஸர்களை பறக்கவிட்டு ருத்ர தாண்டமாடிய சமீர் மின்ஹஸ் (Sameer Minhas) அதிரடி சதம் விளாசினார்.
சமீர் சாதனை சதம்
மொத்தம் 113 பந்துகளை எதிர்கொண்ட சமீர், 9 சிக்ஸர் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 172 ஓட்டங்கள் விளாசினார். 
இதன்மூலம் இளையோர் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் விளாசிய பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். 
பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் குவித்தது. தீபேஷ் 3 விக்கெட்டுகளும், ஹெனில் பட்டேல் மற்றும் கிலன் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |