எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு: 24 ஆண்டுகளுக்கு பிறகு விடைபெறும் வீரர்
இங்கிலாந்தின் சமித் படேல் கவுன்டி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
24 ஆண்டுகால கிரிக்கெட்
நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்தைச் சேர்ந்த சமித் படேல், தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடை பெறுகிறார்.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தடையைத் தொடர்ந்து அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
அதன் பின்னர் அவர் ஒரு தேர்வாளர் பதவிக்கு விண்ணப்பித்திருப்பதாகவும், அது முடியாவிட்டால் The Hundred தொடரின்போது ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணியின் பயிற்சி ஊழியர்களுடன் பணியாற்ற விரும்புவதாக வெளிப்படுத்தினார்.
மேலும் பேசிய அவர், "நான் கிரிக்கெட் விளையாடுவதை விரும்புகிறேன். அது ஒரு பேரார்வம். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு" என்றார்.
பல கிளப் அணிகள்
41 வயதாகும் சமித் படேல் (Samit Patel) 2002ஆம் ஆண்டு முதல் நாட்டிங்காம்ஷிரே, வாரியர்ஸ், தம்பிள்ளை வைக்கிங்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், நார்தர்ன் சூப்பர் சார்ஜர்ஸ் உள்ளிட்ட பல கிளப் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.
இங்கிலாந்து தேசிய அணிக்காக 36 ஒருநாள் போட்டிகளில் 482 ஓட்டங்கள் எடுத்ததுடன் 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
18 டி20 போட்டிகளில் 189 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் 9 டெஸ்ட் போட்டிகளில் 151 ஓட்டங்கள், 7 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.



| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |