கம்மின்ஸ் எதையும் விட்டுவைக்கவில்லை! தோல்வி குறித்து பேசிய சஞ்சு சாம்சன்
குவாலிஃபையர் 2 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது குறித்து சஞ்சு சாம்சன் கருத்து தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.
SRH நிர்ணயித்த 176 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய RR 139 ஓட்டங்களே எடுத்து தோல்வியடைந்தது.
We’re sorry, #RoyalsFamily. pic.twitter.com/H85WckpSkL
— Rajasthan Royals (@rajasthanroyals) May 24, 2024
தோல்விக்கு பின்னர் பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில், ''அது ஒரு பாரிய போட்டியாக இருந்தது. முதல் இன்னிங்சில் நாங்கள் பந்துவீசிய விதம் குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர்களின் சூழலுக்கு எதிராக மிடில் ஓவர்களில் எங்களுக்கு வாய்ப்புகள் குறைவாகவே காணப்பட்டன, அங்குதான் நாங்கள் ஆட்டத்தை இழந்தோம்.
இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் வித்தியாசமாக நடந்துகொள்ளத் தொடங்கியது, பந்து சிறிது மாறத் தொடங்கியது, அவர்கள் அந்த சாதகத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டனர்.
SRH துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் சுவாரசியமானவர்கள், அவர்களால் நிச்சயம் போட்டியை எடுத்துக் கொள்ள முடியும். கடந்த 16 ஆண்டுகளாக ஐபிஎல் ஒரு சிறந்த விளையாட்டை எங்களுக்கு அளித்தது. கேப்டனாக வெற்றி பெற வேண்டிய எதையும் பேட் கம்மின்ஸ் விட்டுவைக்கவில்லை போல் தெரிகிறது'' என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |