No.1 விற்பனையில் இருக்கும் Samsung 5G மாடல் : திடீரென சலுகையை அறிவித்த நிறுவனம்
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றிற்கு புதிய சலுகையை சாம்சங் (Samsung) நிறுவனம் அறிவித்துள்ளது.
எந்த மாடல்?
சாம்சங் (Samsung) நிறுவனம், சாம்சங் கேலக்சி ஏ14 5ஜி (Samsung Galaxy A14 5G) ஸ்மார்ட்போனிற்கு தான் சலுகையை அறிவித்துள்ளது. Counterpoint Research -ன் படி இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் இடத்தில் இந்த போன் தான் இருக்கிறது.
Samsung Galaxy A14 5G மீது ரூ.1000 கேஷ்பேக் சலுகையை (Cashback Offer) சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. முக்கியமாக, இந்த சலுகை Samsung Galaxy A14 5G -யின் மூன்று ஸ்டோரேஜ் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
இந்த சலுகை மூலம் Samsung Galaxy A14 5G ஸ்மார்ட்போனின் 4 GB ரேம் + 64 GB ஆப்ஷன் தற்போது ரூ.13499 விலையில் கிடைக்கிறது. இந்த விலையானது Axis Bank வழியாக ரூ.1000 கேஷ்பேக்கை உள்ளடக்கிய விலையாகும்.
வெப்பநிலை செட் செய்யும் Xiaomi Smart Electric Blanket.., வாஷிங் மெஷினில் துவைக்கலாம்: விலை தெரியுமா?
மேலும், Samsung Galaxy A14 5G ஸ்மார்ட்போனின் 6 GB ரேம் + 128 GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8 GB ரேம் + GB ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போன்கள் samsung stores, samsung.com மற்றும் பிற ஒன்லைன் தளங்கள் மூலம் கிடைக்கும்.
என்னென்ன அம்சங்கள்
இது Android 13 OS அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 (One UI 5.0) கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 1080 x 2408 pixels, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) உடன் 6.6 inch LCD Display கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் MediaTek Dimensity 700 SoC மூலம் இயக்கப்படுகிறது. இது 8 GB வரையிலான RAM + 256 GB வரையிலான Internal storage உள்ளது. அதோடு Micro SD Slot வழியாக 1 TB வரை மெமரியை விரிவாக்கக்கூடியது.
Triple Rear Camera Setup கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போனில் 50 megapixel (எஃப்/1.8) மெயின் கேமரா + 2 megapixel (எஃப்/2.4) மேக்ரோ கேமரா + 2 megapixel (எஃப்/2.4) டெப்த் கேமரா உள்ளது.
அதுமட்டுமல்லாமல், அக்ஸலரோமீட்டர், பாரோமீட்டர், ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், கைரோ சென்சார், ஜியோமேக்னடிக் சென்சார், லைட் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்களையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 3.5மிமீ Headphone Jack உள்ளது. இது 15W Fast Charging உடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. அளவீட்டில் 167.7 x 78.0 x 9.1மிமீ மற்றும் 204 கிராம் எடையை கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |