Samsung Galaxy S26 Ultra வெளியீட்டு திகதி, முன்பதிவு விவரங்கள் அறிவிப்பு
சம்சுங் தனது புதிய Galaxy S26 Ultra ஸ்மார்ட்போனை வெளியிடும் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
Forbes வெளியிட்ட தகவலின்படி, இந்த மொடல் பிப்ரவரி இறுதியில் அறிமுகமாகி, மார்ச் 11, 2026 முதல் உலகளவில் விற்பனைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், நம்பகமான லீக்கர் Ice Universe தெரிவித்தன்படி, பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை முன்பதிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அதன்பின், மார்ச் 5 முதல் 10 வரை 'pre-sale' காலம் நடைபெறும். மார்ச் 11 அன்று பொதுவான விற்பனை தொடங்கும்.
சம்சுங், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு 50 டொலர் மதிப்பிலான accessory store credit வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், “Friday the 13th” எனப்படும் அசுப நாளை தவிர்க்கும் வகையில், மார்ச் 11 புதன்கிழமை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், Galaxy S26 Ultra-விற்கு இணையாக புதிய Magnetic Wireless Powerbank அறிமுகமாக உள்ளது.
5000mAh திறன் கொண்ட இந்த powerbank, Qi2 wireless charging standard மூலம் 15W வேகத்தில் சார்ஜ் செய்யும்.
USB-C வழியாக 20W வரை வேகம் அதிகரிக்கும். விலை 59.90 யூரோ என ஐரோப்பாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Samsung Galaxy S26 Ultra release date, Galaxy S26 Ultra preorder details, Samsung S26 Ultra specs and features, Galaxy S26 Ultra launch 2026, Samsung flagship phone 2026, Galaxy S26 Ultra price India, Samsung S26 Ultra accessories, Galaxy S26 Ultra wireless powerbank, Samsung Qi2 charging phone, Galaxy S26 Ultra latest news