சாம்சங் புது மடிக்கக்கூடிய சாதனங்கள் இந்த மாதத்தில் தான் வெளியீடு! வெளியான தகவல்
ஆகஸ்ட் 11 ஆம் திகதி சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வு ஆன்லைனில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த நிகழ்வை சாம்சங் வலைதளம், சாம்சங்கின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் நேரலை செய்யப்படுகிறது.
இந்த நிகழ்வில் கேலக்ஸி இசட் ப்ளிப் 3, கேலக்ஸி இசட் போல்டு 3, கேலக்ஸி வாட்ச் 4, கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 4 மற்றும் கேலக்ஸி பட்ஸ் 2 போன்ற சாதனங்களை சாம்சங் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த நிகழ்வு குறித்து ஆகஸ்டில் அன்பேக்டு நிகழ்வு குறித்து சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.