ராணுவ தரச்சான்றிதழ் பெற்ற Samsung Galaxy XCover 7 அறிமுகம்.., ஏகப்பட்ட சிறப்பம்சங்கள்
சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த Samsung Galaxy XCover 7 ஸ்மார்ட்போனை பற்றி தான் பார்க்க போகிறோம்.
அமெரிக்க இராணுவத் தரமான MIL-STD-810H ஆல் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன்படி, குறைந்த மற்றும் உயர்ந்த வெப்பநிலையிலும் இதனை பயன்படுத்தலாம். நீரில் மூழிகினாலும் இது தாங்கும் திறன் கொண்டது.
பல்வேறு சோதனைக்கு பிறகு தான் சாம்சங் நிறுவனம் Samsung Galaxy XCover 7 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Samsung Galaxy XCover 7 சிறப்பம்சங்கள்
Samsung Galaxy XCover 7 ஸ்மார்ட் போனில் 6.6-inch Full HD+ TFT LCD display, 60Hz refresh rate, 20:9 aspect ratio மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus) ஆகிய வசதிகள் உள்ளன.
மேலும் சக்திவாய்ந்த MediaTek Dimensity 6100+ processor உடன் மேம்பட்ட செயல்திறனுடன் வழங்கும். இதில் Mali G57 GPu Graphics card இருப்பதால் கேமிங் பயனர்கள் இந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
அதோடு, 6GB RAM மற்றும் 128 GB மெமரி வசதியோடு கூடுதலாக மெமரி நீட்டிப்பு வசதியும் கொண்டுள்ளது.மெமரி கார்டை பயன்படுத்த ஒரு microSD card slot ஆதரவும் உள்ளது.
OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனில் Face Unlock, Dolby Atmos போன்ற அம்சங்கள் உள்ளது. முக்கியமாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனத்தை செலுத்தியுள்ளது.
மேலும், கேமராவை பொருத்தவரை LED flash ஆதரவு கொண்ட50MP rear camera, செல்பி, வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 5MP camera போன்ற அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட் போனை கொரியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் விற்பனைக்கு வரும்.மேலும், விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |