சாம்சங்கிற்கு போட்டியாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்! கூகுள் அதிரடி... புகைப்படங்கள்
சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகின்றது.
கூகுள் நிறுவன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்
பிக்சல் ஃபோல்டு பெயரில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதன்படி கூகுள் நிறுவன மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் மொடலுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.
வினியோக பிரிவு சார்ந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி பிக்சல் ஃபோல்டு உற்பத்தி பணிகள் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு ஆகும். சாம்சங் டிஸ்ப்ளே வெளியிட்டு இருக்கும் தகவல்களில் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடல்களுக்கான முன்பதிவு கிடைத்திருப்பதாக தெரிவித்து இருக்கிறது.
gsmarena
கடும் போட்டி
பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் 7.57 இன்ச் OLED பிரைமரி டிஸ்ப்ளே, 5.6 இன்ச் கவர் ஸ்கிரீன் கொண்டிருக்கும் என்றும் இந்த ஸ்மார்ட்போனின் உற்பத்தி பணிகள் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத வாக்கில் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை தொடர்ந்து அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி உற்பத்தியாளராக சாம்சங் விளங்குகிறது.
அந்த வகையில், கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாம்சங் மொடல்களிடம் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
digitaltrends