குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள்! சாம்சங் நிறுவனம் அசத்தல்.. புகைப்படங்கள்
குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக கேலக்ஸி ஃபோல்டு மொடலை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. பின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டு வருகிறது.
இதன் விளைவாக கேலக்ஸி இசட் ப்ளிப் மொடலும் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில், சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி இசட் சீரிஸ் மாடலின் லைட் வெர்ஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த 2 ஆண்டுகளாக தகவல் வெளியானது.
பின் அது வதந்தியாக இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை மீண்டும் அறிமுகப்படுத்தும் பணியில் அந்நிறுவனம் மும்முரமாக இறங்கி உள்ளது. கேலக்ஸி ஃபோல்டு லைட் இசட் சீரிஸ் மாடலாக இருக்காது என கூறப்படுகிறது.
தற்போதைய தகவல்களின் படி புதிய ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்படும் என்றும், இதில் 7 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் மிக மெல்லிய கிளாஸ் இடம்பெற்றிருக்குமாம். இதன் விலை சாம்சங்கின் தற்போதைய மடிக்கக்கூடிய மொடல்களை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.