புதிய தலைமுறை AI அம்சங்களுடன் வெளியாகவிருக்கும் Samsung Galaxy S25 சீரிஸ்
தொழில்நுட்ப நிறுவனமான சம்சுங் (Samsung) தனது வருடாந்திர வெளியீட்டு நிகழ்வான 'Galaxy Unpacked 2025' வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வு ஜனவரி 22-ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறும்.
இந்த நிகழ்வில், நிறுவனம் தனது Flagship S series ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும். இதில் Galaxy S25, Galaxy S25 Plus மற்றும் Galaxy S25 Ultra ஆகியவை அடங்கும்.
இது தவிர, Galaxy Tri-Fold ஃபோன் மற்றும் Galaxy S25 slim ஃபோனையும் வெளியிடலாம் என்று சில ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
நிறுவனம் Galaxy S25 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவைத் தொடங்கியுள்ளது.
இந்த மொபைலை Samsung-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளம், பிரத்யேக கடைகள், ஓன்லைன் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் ரூ.2000 டோக்கன் பணத்தை செலுத்துவதன் மூலம் முன்பதிவு செய்யலாம்.
முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் புதிய கேலக்ஸி எஸ் சீரிஸ் சாதனங்களை வாங்கும்போது ரூ.5000 வரை நன்மை பெறுவார்கள்.
புதிய Samsung Galaxy S25 தொடரின் அனைத்து மொடல்களும் மேம்பட்ட மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, இந்த போன்களில் Gemini Nano V2 AI தொழில்நுட்பத்தைக் காணலாம்.
புகைப்படங்களை எடுப்பது, படங்கள் மற்றும் வீடியோக்களைத் திருத்துவது, உங்கள் சொந்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட செயல்பாட்டிற்கு ஏற்ப பயனர் இடைமுகத்தை மதிப்பிடுவது உள்ளிட்ட பல பணிகளில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
சாம்சங் கேலக்ஸி 25 சீரிஸ் எதிர்பார்க்கப்படும் விலை, சாம்சங் S25 ரூ.79,999 ஆரம்ப விலையிலும், S25 Plus ரூ.99,999 க்கும், S25 Ultra ரூ.1,29,999 ஆரம்ப விலையிலும் அறிமுகப்படுத்தலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Samsung galaxy S25 Sries, Samsung Galaxy Unpacked 2025