2025-ஆம் ஆண்டின் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள்
ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் Henley Passport Index-இன் புதிய பட்டியல் 2025-இல் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளை விளக்குகிறது.
இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் (IATA) வழங்கும் Timatic தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த பட்டியல், உலகின் 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை, 227 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகை அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
முன்னணியில் உள்ள பாஸ்போர்ட்டுகள்
1. சிங்கப்பூர்
2025-இல் சிங்கப்பூர் 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகையுடன் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது.
2. ஜப்பான்
ஜப்பான் 193 நாடுகளுக்கான விசா-இல்லா அனுமதியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் சீனாவுக்கும் விசா இல்லாமல் செல்லும் சலுகை முதன்முறையாக இந்தாண்டு சேர்க்கப்பட்டுள்ளது.
3. ஐரோப்பிய நாடுகள் மற்றும் தென் கொரியா
2024-இல் முதலிடத்தில் இருந்த பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் இப்போது 192 நாடுகளுக்கு விசா-இல்லா அனுமதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.
இவை தென் கொரியா மற்றும் பின்லாந்துடன் இணைந்து இருக்கின்றன.
4. 7 ஐரோப்பிய நாடுகள்
192 நாடுகளுக்கு விசா இல்லாமல் நுழையும் அனுமதியுடன் ஆஸ்த்ரியா, டென்மார்க், அயர்லாந்து, லக்ஸ்சம்பர்க், நெதர்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் நான்காவது இடத்தில் உள்ளன.
5. ஐரோப்பிய நாடுகள் மற்றும் நியூசிலாந்து
பெல்ஜியம், போர்ச்சுகல், ஸ்விட்சர்லாந்து, பிரித்தானியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் சலுகையுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
பிரித்தானியா, கடந்த சில ஆண்டுகளில் அதன் பாஸ்போர்ட் சக்தியில் பெரிய மாற்றங்களை சந்தித்துள்ளது.
2025-இல் பாஸ்போர்ட் சக்தி பாதிக்கப்படுவதற்கு போர்கள், அரசியல் கலவரங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் காரணமாக உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
World’s Most Powerful Passports In 2025, Henley Index, 2025 World’s Most Powerful Passports, strongest passport in the world