திரைப்பட பாணியில் AK-47 துப்பாக்கியை கார் சன்னல் வழியாக காட்டிய பெண்!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கார்பந்தயத்தின்போது, சன்னலுக்கு வெளியே இளம் பெண் ஒருவர் AK-47 ரக துப்பாக்கியை வைத்து குறிவைத்தபடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த ஜூலை 11-ஆம் திகதி நடந்தது.
இது குறித்து சான் பிரான்சிஸ்கோ பொலிஸார் கூறுகையில், சம்பவத்தன்று, Barneveld & Mckinnon சாலையில் இளைஞர்கள் பலர் திடீரென சட்டவிரோதமாக ஒரு கார் பந்தயத்தில் ஈடுபட்டுனர்.
அப்போது, அந்தப் பந்தயத்தில் பங்கேற்ற ஒரு Cadillac காரின் சாளரத்தின் வழியாக வெளியே எட்டிப்பார்த்த பெண், முன்னே சென்று கொண்டிருந்த ஒரு காரை நோக்கி AK-47 ரக துப்பாக்கியால் குறி வைத்துள்ளார்.
ஹாலிவுட் திரைப்படங்களில் கார் சேஸிங்கில் இருக்கும்போதே துப்பாக்கியால் சுடுவது போல் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொது மக்கள் மிரண்டனர். மேலும், அப்பெண் துப்பாக்கியால் குறிவைக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதனை அடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) அப்பெண்ணை பொலிஸார் கண்டுபிடித்துவிட்டனர். அவர் பந்தயத்தில் பயன்படுத்திய கேடிலாக் கார் கையகப்படுத்தப்பட்டது.
துப்பாக்கியால் குறிவைத்த அப்பெண் தாக்குதல் நடத்தினாரா, சம்பவம் தொடர்பாக யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து பொலிஸார் தகவல் அளிக்க மறுத்துவிட்டனர். ஆனால், சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினார்.
On 7/11/2021, During an illegal exhibition of speed event at Barneveld & McKinnon, a passenger leaned out of a Cadi holding an AK47; see photo. SFPD Traffic Company personnel worked up a case, and seized this particular vehicle today. @SFPD @sfmta_muni @SFPDPerea pic.twitter.com/4disQpzziY
— SFPDTrafficSafety (@SFTrafficSafety) August 5, 2021