சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சு.., உதயநிதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
சனாதனம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் உதயநிதி ஸ்டாலினுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதயநிதியின் சனாதனம்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகிய நோய்களை ஒழிப்பது போல சனாதனத்தை எதிர்க்காமல் ஒழிக்க வேண்டும். அது தான் நாம் செய்யும் முதல் பணி" என்று பேசியிருந்தார்.
இவரின் பேச்சுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் கிளம்பி வந்தன. ஆனாலும், உதயநிதி, தான் பேசியது சரி என்றும், வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார் என்றும் கூறியிருந்தார்.
இதையடுத்து கர்நாடகா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உதயநிதிக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அந்தவகையில், பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் பரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஜாமீன்
இந்நிலையில், இன்று காலை பெங்களூரு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அப்போது அவருக்கு ஓரு லட்சம் ரூபாய் பிணைத்தொகை உடன் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் மாதம் 8ம் திகதிக்கு ஒத்திவைத்து.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |