சனாதன சர்ச்சை.. பள்ளி புத்தகத்தில் இருந்த சனாதான கருத்துகள் நீக்கப்படும்: அன்பில் மகேஷ்
பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இருந்து சனாதன கருத்துகள் அடுத்த ஆண்டு நீக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
புத்தகத்தில் சனாதனம்
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதனம் குறித்த கருத்துக்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் பிளஸ் 2 பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சனாதன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
அதாவது, தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டுக்கான அறவியலும் இந்திய பண்பாடும் என்ற பாட புத்தகத்தின் பக்கம் 58-ல், "இந்து அல்லது ஹிந்து என்ற சொல்லை ஹிம்+து எனப் பிரிக்கலாம். ஹிம்-ஹிம்சையில், து-துக்கிப்பவன் எனப் பொருள்படும்.
ஓர் உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால், அத்துயரத்தை தனக்கேற்பட்ட துயரமாகக் கருதி, அகற்ற முன் வருபவனே இந்து ஆவான். அப்பண்புமிக்க மக்களைக் கொண்ட சமயமே இந்து சமயமாகும்.
இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. சனாதன தருமம் என்றால் அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்" என்ற கருத்து இடம் பெற்றுள்ளது.
சனாதன கருத்துக்கள் நீக்கப்படும்
இந்நிலையில், தமிழக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "2018 ஆம் ஆண்டு கொண்டு வந்த பாடபுத்தக்த்தில் சனாதன கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடபுத்தகங்கள் மாற்றியமைக்கப்படுவதால் அடுத்தாண்டு மாற்றியமைக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |