இலங்கையில் ஊரடங்கு சட்டம் உத்தரவு குறித்து சனத் ஜெயசூர்யா கருத்து
இலங்கையில் ரணில் விக்ரமசிங்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதை குறிப்பிட்டு, முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பதற்றமான சூழல் நிலவுவதால் மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை அமுல்படுத்துமாறு, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா தனது ட்விட்டர் பதிவில், 'நடிகர் மிஸ்டர் பீன் கிரிக்கெட் விளையாட உள்ளதாக கற்பனை செய்துபாருங்கள், தேர்வாளர்கள் அவரை நிராகரித்த போதிலும் அவர் அணியில் சேர்க்கப்படுகிறார்.
Imagine Mr Bean brought into the team despite selectors rejected him because he is an ACTOR & not a cricketer! However, not only does he play when umpire rules him out refuses to leave the crease ! No more games. Last man has no chance to bat alone in cricket. Leave GRACEFULLY https://t.co/4neKZKAbV4
— Sanath Jayasuriya (@Sanath07) July 13, 2022
ஏனெனில் அவர் ஒரு நடிகர், கிரிக்கெட் வீரர் அல்ல! இருப்பினும் நடுவர் அவரை அவுட் என்று கூறி தீர்ப்பளிக்கும்போது, அவர் தொடர்ந்து விளையாடுவது மட்டுமல்லாமல் கிரீஸை விட்டு வெளியேற மறுத்துவிட்டார்! இனி விளையாட்டுக்கள் இல்லை. கடைசி வீரருக்கு கிரிக்கெட்டில் தனியாக துடுப்பாட்டம் செய்ய வாய்ப்பு இல்லை. அவரை தாராளமாக விடுங்கள்' என தெரிவித்துள்ளார்.