டெஸ்டில் 100வது வெற்றி பெற்ற இலங்கை அணி! ஜாம்பவான் சனத் ஜெயசூரியா கூறிய வாழ்த்து
அயர்லாந்துக்கு எதிரான டெஸ்டில் இலங்கை அணி வெற்றி பெற்று, 100 டெஸ்ட் வெற்றிகள் அடைந்ததை முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூரியா வாழ்த்தியுள்ளார்.
இலங்கை 100வது வெற்றி
காலேவில் நடந்த அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ் இரட்டை சதமும், திமுத் கருணரத்னே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் சதம் விளாசினர்.
முன்னாள் ஜாம்பவான் வாழ்த்து
இலங்கை அணியின் இந்த வெற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அடைந்த 100வது டெஸ்ட் வெற்றியாகும். இதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Congratulations ??#SLvIRE #LionsRoar pic.twitter.com/yaI4QgnNMw
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 28, 2023
அந்த வகையில் முன்னாள் ஜாம்பவான் வீரர் சனத் ஜெயசூரியா, இலங்கை அணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவர் வெளியிட்ட பதிவில்,
'திமுத் மற்றும் 100வது டெஸ்ட் வெற்றியை பெற்ற இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள். பிரதிபலிக்க இது ஒரு நல்ல நேரம். 100 டெஸ்ட் வெற்றிகளுக்கு பங்களித்த அனைத்து இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களையும் நினைவில் கொள்க' என தெரிவித்துள்ளார்.