704 ஓட்டங்கள் குவித்து இலங்கை டிக்ளேர்! ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடி சதம்
அயர்லாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை அணி 704 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இலங்கை அணி டிக்ளேர்
காலேவில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 704 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
தொடக்க வீரர் மதுஷ்கா 205 ஓட்டங்களும், திமுத் கருணாரத்னே 115 ஓட்டங்களும், குசால் மெண்டிஸ் 245 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடி சதம்
அதன் பின்னர் அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அதிரடியாக 4 சிக்ஸர், 6 பவுண்டரிகள் விளாசி 100 ஓட்டங்கள் எடுத்தார். இது அவருக்கு 15வது டெஸ்ட் சதம் ஆகும்.
Test ? no.15 for Angelo Mathews ?#SLvIRE #LionsRoar pic.twitter.com/5g5NxJ0lg5
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) April 27, 2023
இலங்கை அணி 212 ஓட்டங்கள் முன்னிலை வகித்ததைத் தொடர்ந்து அயர்லாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடி வருகிறது.
இன்றைய நாளில் இலங்கை அணியில் இரு வீரர்கள் இரட்டை சதத்தை எட்டியதுடன், ஒரு வீரர் சதமும் விளாசியது குறிப்பிடத்தக்கது.
@ICC (Twitter)