பவன் கல்யாணுக்கு ஆங்கிலத்தில் பதில் சொன்ன உதயநிதி ஸ்டாலின்
சனாதன தர்மம் விவகாரத்திற்கு உதயநிதியை தாக்கி பவன் கல்யாண் பேசிய நிலையில், உதயநிதி பதில் கொடுத்துள்ளார்.
உதயநிதி பதிலடி
திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகரும் ஆந்திர துணை முதலமைச்சருமான பவன் கல்யாண், "இங்கு அதிகமான தமிழ் மக்கள் இருப்பதால் தமிழில் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தை வைரஸ் என்று சொல்கிறார்கள். இதை யார் சொல்லியிருந்தாரோ அவருக்கு ஒன்று சொல்கிறேன்.
இந்த மாதிரி பல பேர் சொல்லியிருக்கிறார்கள். அதில் நீங்கள் முதல் ஆளும் இல்லை, கடைசி ஆளும் இல்லை. சனாதன தர்மம் எப்போதும் அப்படியே தான் நிலைத்திருக்கிறது. அதை தடுக்க முடியாது.
சனாதன தர்மத்தை உங்களால் எதுவுமே பண்ண முடியாது, யாராலும் அழிக்கவும் முடியாது. அதனை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். திருப்பதி பாலாஜி மண்ணில் இருந்து இதை சொல்கிறேன்.
மதச்சார்பின்மை என்பது ஒரு வழிப் பாதை அல்ல, அது இருவழிப் பாதை. மரியாதை கொடுத்தால் தான் திரும்ப உங்களுக்கு கிடைக்கும்" என்றார்.
இந்நிலையில், சனாதன தர்மத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று பவன் கல்யாண் கூறிய கருத்துக்கு தமிழக துணைமுதலமைச்சர் உதயநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், "LET's WAIT AND SEE" என்று கூறிவிட்டு வேறு எதுவும் சொல்லாமல் சென்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |